GuidePedia


மிகவும் மோசமான கூட்டணிகளில் நாம் பார்க்க போவது சனி ராகு கூட்டணி. ஒரு கெட்டவன் வீட்டில் இருந்தாலே கதை கந்தலாகி விடும் இவ்விருவரும் கூட்டு சேர்ந்தால் அதோ கதிதான். தெரு தெருவாக ஓட விட்டு அடிப்பார்கள். ஒரு வேலை சனியின் சொந்த வீடாக இருந்தால் அதுவும் மகரமாக இருந்தால் மட்டுமே 50% தீய பலன் குறையும் ஏன் என்றால் ராகுவிற்கும் சரி சனிக்கும் சரி உகந்த வீடு. குரு பார்த்தல் ஆறுதலை தரும்.

இந்த மாதிரி கிரக கூட்டணி பிறந்த குழந்தை ஜாதகத்தில் பார்த்தல் உண்டு. ஏன் என்றால் அதற்க்கு பிறகு அந்த ஜாதகத்தை கொண்டு வர அவன் நல்ல நிலைமையில் இருக்க மாட்டன்.

1இல் சனி ராகு

இப்படி அமைப்பில் பிறந்த குழந்தை பத்து வயதிற்குள் உயிரைவிடும் அபாயம் உண்டு. லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தப்பிப்பிழைக்கும். தப்பினாலும், வலிப்பு, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் உண்டாகலாம். ஜாதகனை ஒருத்தனும் மதிக்க மாட்டன். அப்படி மதித்தாலும் இவன் மேல் இருக்கும் பயம் ஒரு காரணமாக இருக்கலாம். தாய் தந்தையை விட மிகவும் கருப்பாக இருப்பான்.

2இல் சனி ராகு

தீராத பணக்கஷ்டம், பணத்தைத் தவிர வேறு சிந்தனையில்லாத வாழ்க்கை. நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசித் தொலைத்து பெயரைக் கெடுத்துக் கொள்ளும் தன்மை, குடும்பத்தில் கலகம். முதலில் பெற்றோர்களுடன். பிறகு வந்தவளுடன், குடும்பம் அமையாது. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

3இல் சனி ராகு

கோபமே இவன் தெய்வம். வாய்ப்புக் கிடைத்தால் சவுக்குக் கட்டை, அறிவாள் என்று கையில் தூக்கும் ஆசாமி. உடன்பிறப்புக்களுடன் வம்பு, வழக்கு, கோர்ட், என்று பாதி வாழ்க்கை, விவகாரங்களில் தீர்ந்துவிடும். ஆண்மை சீக்கிரமே கரைத்து விடும், காம என்னதால் சீரழிவான்.

4இல் சனி ராகு

ஜாதகன் வீட்டை விட்டு வெளியேறிவிடுவான் அல்லது வெளியேற்றப்படுவான் நாடோடியாகத் திரிய வேண்டியதிருக்கும். ஜாதகன் அவனுடைய தந்தையைத்தான் முதல் எதிரியாக நினைப்பான். வீடு என்று ஒன்றும் இருக்காது ஒழுக்கம் கெட்டவன்.

5இல் சனி ராகு

ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் சல்லிக்காசுகூட பயன் இருக்காது இவனால் அவன் குழந்தைகளுக்கும் பயன் இருக்காது. ஜாதகனுக்கு நிலையான மனம், செயல்கள் இருக்காது. அதிர்ஷ்டமும் இருக்காது.

6இல் சனி ராகு

ஜாதகன் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான் பசியால் அல்ல, வலியால். பல முறை இதற்காகவே hospital செல்ல வேண்டி வரும். பெண்ணால் இருந்தால் குழந்தை பிறப்பது ஆபத்தில் முடியும். அவன் தலைமுடியைவிடக் கடன்கள் அதிகமாக இருக்கும். மாமன் உறவு வழியில் பிரச்சனை உண்டாகும்.

7இல் சனி ராகு

ஜாதகனுக்கு அரைக் கிழவனான பிறகு திருமணம் நடக்கும். அதாவது நாற்பது வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு கடைசிவரை திருமணம் நடக்காது! பெண்களுக்கு முதிர் கன்னியான பிறகு நடைபெறும்! பெண், ஜென்மம், பாவம் சாமி, எந்த வயதானால் என்ன? எப்படியோ திருமணம் நடைபெற்றால் சரிதான். அவள் கழுத்தில் விழும் முதல் மாலை அவள் இறந்த பிறகு போடப்பட்டதாக இருக்கக் கூடாது பெண் எனப்பட்டவள், ஒரு கண நேரமாவது, ஒரு ஆணின் அரைவனப்பில் சுகப்பட்டுவிட்டுத்தான் இறக்க வேண்டும். இல்லையென்றால் அவள் ஜென்மம் கடைத் தேறாது.

8இல் சனி ராகு

பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக் கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான் அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும். முன்னோர்கள் சொத்து ஒன்று கூட கிடக்கிறது.

9இல் சனி ராகு

ஜாதகன் தர்மகாரியங்களில் ஈடுபடுவதாகக் காட்டி நிறைய வசூல் செய்வான். பலரையும் ஏமாற்றி வசூல் செய்யும் பணத்தில் சொகுசாக வாழ்வான். கடைசியில் தர்ம அடி வாங்க நேரிடும். மதம் என்ற பெயரில் ஏமாற்றுவன். இல்லையனில் கடவுளை மதிக்க மாட்டன்.

10இல் சனி ராகு

ஜாதகன் ஆராய்ச்சியாளனாக உயர்ந்து, பல வழிகளிலும் சிறப்படைவான். சிலர் வண்டி, வாகனங்களை வைத்து ஜீவிக்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலருக்கு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும். ஒரு வருடம் காரில் பறப்பான். அடுத்த வருடமே கஷ்டத்தில் காரை விற்றுவிட்டு சைக்கிளில் பயணிப்பான். அதற்கு அடுத்த வருடம் மோட்டார் சைக்கிளில் செல்வான் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்புவான். அப்படியே அவனுடைய வாழ்க்கை சைக்கிள் (Life Cycle) இருக்கும்.

11இல் சனி ராகு

ஜாதகனுக்குத் தலைமை அந்தஸ்து கிடைக்கும், நிறுவனங்கள் என்றால் Team Leader to Chief Executive வரை ஏதாவது ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பான். அல்லது அந்த நிலைக்கு உயர்வான். கிராமமாக இருந்தால் நாட்டமையாகவும், நகரமாக இருந்தால் நகராட்சித் தலைவராகவும், அரசியலாக இருந்தால் அறியப்பட்ட கட்சித்தலைவராகவும் ஜாதகன் இருப்பான். உயர்வான நிலையில் இருப்பான், அல்லது அந்த நிலையை எட்டிப் பிடிப்பான். திரைத்துறை என்றால் ஏதாவது ஒரு அமைப்பில் தலவராக இருப்பான். மூத்த சகோதரன் இருந்தால் அவனுக்கும் இவனுக்கும் ஆகாது அடிதடி தான்.

12இல் சனி ராகு

பெண்ணாக இருந்தால், தன்னை விட மிகவும் வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள நேரிடும். ஆடவனாக இருந்தால் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மணந்து கொள்வான் அல்லது தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பான் அதைச் சந்தோஷமாகவும் வைத்திருப்பான். ரகசியமாகவும் வைத்திருப்பான். கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்த மாட்டன்.

 
Top