GuidePedia


பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அதை நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. வாரம்
2. நட்சத்திரம்
3. திதி
4. யோகம்
5. கரணம்



வாரம்

ஏழு வாரங்கள் அவை யாவன:
1. ஞாயிறு
2. திங்கள்
3. செவ்வாய்
4. புதன்
5. விழாயன்
6. வெள்ளி
7. சனி



நட்சத்திரம்

அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி



திதி

திதி என்பது ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
1. ப்ரதமை
2. த்விதியை
3. த்ருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. ஷஷ்டி
7. ஸப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. த்ரயோதசி
14. சதுர்த்தசி
15. பௌர்ணமி (அல்லது) அமாவாஸ்யை
பொதுவாக 30 திதி ஆகும் அமாவாஸ்யை அடுத்து வருவது வளர்பிறை திதி பௌர்ணமி அடுத்து வருவது தேய்பிறை திதி ஆகும். மாதம் என்பது இரண்டு பக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமி அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.



யோகம்

வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
1. விஷ்கம்பம்
2. பிரீதி
3. ஆயுஷ்மான்
4. சௌபாக்கியம்
5. சோபனம்
6. அதிகண்டம்
7. சுகர்மம்
8. திருதி
9. சூலம்
10. கண்டம்
11. விருதி
12. துருவம்
13. வியாகதம்
14. அரிசணம்
15. வச்சிரம்
16. சித்தி
17. வியாதிபாதம்
18. வரியான்
19. பரிகம்
20. சிவம்
21. சித்தம்
22. சாத்தீயம்
23. சுபம்
24. சுப்பிரம்
25. பிராமியம்
26. ஐந்திரம்
27. வைதிருதி



கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும்.
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. சைதுளை
5. கரசை
7. வனசை
8. பத்திரை
9. சகுனி
10. சதுஷ்பாதம்
11. நாகவம்
12. கிமிஸ்துக்கினம்

 
Top