GuidePedia


ஸ்கிப்பிங்

உயரத்தை அதிகரிக்க தினமும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

பால்

பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும புரோட்டீன் ஆகிய மூன்று சத்துக்களும் உடலின் வளர்ச்சிக்கு முக்கியமானது, எனவே பாலை தினமும் தவறாமல் 2-3 டம்ளர் குடித்து வர வேண்டும்.

தொங்குதல்

கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கி எழுவதன் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இளம் வயதில் அதிகம் செய்து வந்தால், தண்டுவடமானது நன்கு வளர்ச்சியடையும். இது உயரமாவதற்கு உதவியாக இருக்கும்.



நேராக எழுதல்

நேராக நின்று கொண்டு, இரண்டு குதிகால்களை மேலே தூக்கி மற்றும் பாதவிரல்களால் நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, முடிந்த அளவில் கைகளை நீட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் நீண்டு, உயரமாக உதவியாக இருக்கும்.

தண்ணீர்

கராத்தே பயிற்சியில் செய்யப்படும் ஒரு முறை தான் காலை உதைத்தல். இதற்கு ஒரு காலை மட்டும் தலைக்கு மேல் நோக்கி உதைக்க வேண்டும். இது போன்று மற்றொரு காலையும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் குறைந்தது 10 முறை செய்து வந்தால், கால்கள் வளர்ச்சியடைய உதவும்.

காலை உதைத்தல்

காப்ஃபைன், கார்போனேட் பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

போதுமான தூக்கம்

தூங்கும் போது, பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுவதோடு, உடலும் வளர்ச்சியடையும் . எனவே உயரமாக, உடலுக்கு போதிய ஓய்வை வழங்க வேண்டும். அதிலும் சிறுவயதிலேயே 8-11 மணிநேர ஆழமான தூக்கத்தைக்கொண்டால், ஒருவர் நல்ல உயரமாக வளர முடியும்.

உணவுகள்

சூரிய ஒளி (மிகவும் முக்கியமானது கால்சியம் கிரகிக்க வேண்டுமெனில் இது முக்கியம்), காளான், தண்ணீர், பால்பொருள்கள், முட்டை, மீன்.

நீச்சல்

நீச்சல் என்பது குளித்து விட்டு எழும்புவது இல்லை, தினமும் அரை கிலாமீட்டருக்காவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.

 
Top