GuidePedia


இப்பொது நாம் கலியுகத்தில் இருக்கிறோம் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். பொதுவாக மணி, நிமிடம் என்று இப்போது பார்க்கிறோம் ஆனால் இதற்க்கு முன்னர் நாழிகை, விநாழிகை கணக்குகளே நாம் பயன்படுத்தினோம், இது முன்னோர்கள் நமக்கு பல ஆயிரம் வருடத்திற்கு முன்னர் சொல்லி தந்தது.


கிழே உள்ள நாழிகை, விநாழிகை கணக்குகள் ஜோதிடத்தில் பயன்படுத்தபடுகின்றன, இதை தவிர மேலே படிக்கவும்.

1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை
1 வினாழிகை = 60 தர்ப்பரை
1 நாழிகை = 60 வினாழிகை
1 நாள் = 60 நாழிகை
365நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி = 1 சௌரமான வருடம்


இன்னும் ஆழமாக போய் பார்த்தல் தத்பரா-வில் இருந்து பாப்போம் இங்குதான் நமக்கு அண்ட கணக்குகள் ஆரம்பிகிறது. ஜோதிடம் தெரிந்து கொள்பவர்கள் இதையும் தெரிந்து கொள்வது நல்லது.

1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா

2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்
3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்
7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்
60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்
15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்
15 நிமிடம் = 1 காஷ்டை
30 காஷ்டை = 1 கலை
30 கலை = 1 முகூா்த்தம்
30 முகூா்த்தம் = 1 அகோரத்திரம் (நாள்)
15 அகோரத்திரம் = 1 பட்சம்
2 பட்சம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 வருடம்
கிருத யுகம்—1,728,000 வருடங்கள்
திரேதா யுகம்—1,296,000 வருடங்கள்
துவாபர யுகம்—864,000 வருடங்கள்
கலியுகம்—432,000 வருடங்கள் [கலியுகம் கி.மு 3102 பிறந்ததாக நம்பபடுகிறது] [கலியுகம் 5118 ஏப்ரல் 8, 2016 அன்று தொடங்கியது]
4 யுகம் = 1 மகா யுகம் அல்லது சதுா்யுகம்
12 மகா யுகம் = 1 மன்வந்திரம்
14 மன்வந்திரம் = ஒரு கல்பம்

இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன
1. வாமதேவ கல்பம்
2. ஸ்வேத வராக கல்பம்
3. நீல லோகித கல்பம்
4. ரந்தர கல்பம்
5. ரெளரவ கல்பம்
6. தேவ கல்பம்
7. விரக கிருஷ்ண கல்பம்
8. கந்தற்ப கல்பம்
9. சத்திய கல்பம்
10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம்
12. சாரஸ்வத கல்பம்
13. உதான கல்பம்
14. காருட கல்பம்
15. கெளரம கல்பம்
16. நரசிம்ம கல்பம்
17. சமான கல்பம்
18. ஆக்நேய கல்பம்
19. சோம கல்பம்
20. மானவ கல்பம்
21. தத்புருஷ கல்பம்
22. வைகுண்ட கல்பம்
23. லெச்சுமி கல்பம்
24. சாவித்ரி கல்பம்
25. கோர கல்பம்
26. வராஹ கல்பம்
27. வைராஜ கல்பம்
28. கெளரி கல்பம்
29. மகோத்வர கல்பம்
30. பிதிர் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.



யுகங்களிள் வாழும் மனிதர்களின் குணங்கள் மற்றும் அமைப்புகள்

கிருத யுகம்

தேவர்கள் பூலோகத்திலும் அரக்கர்கள் பாதள லோகத்திலும் வாழ்வார்கள், மனிதர்கள் சராசரியாக 924cm உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்.

திரேதா யுகம்

தேவர்கள், அரக்கர்கள் வெவ்வேறு நாட்டில் வாழ்வார்கள், மனிதர்கள் சராசரியாக 616cm உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள், உதாரணம் விஷ்ணுவின் ராம அவதாரம்.

துவாபர யுகம்

தேவர்கள், அரக்கர்கள் ஒரே குடும்பத்தில் வாழ்வார்கள், மனிதர்கள் சராசரியாக 308cm உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். உதாரணம் விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்.

கலியுகம்

தேவர்கள், அரக்கர்கள் ஒரே உடலில் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 164cm உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள், மனதை ஒருநில படுத்துவதன் மூலம் நம்மில் இருக்கும் தேவ குணத்தை எழுப்ப இயலும், ஆனால் தற்போதுள்ள மனிதர்கள் எதை சொன்னாலும் நம்பிக்கொண்டு உண்மையை ஆராயாமல் தவறான வழிகளில் ஈடுபடுகிறார்கள். அமைதி என்பதே உண்மை என அறிய வேண்டும்.



ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது உலகைப் படைக்கும் பிரம்ம தேவனின் ஒரு பகற் பொழுதாகும்

2,000 சதுர் யுகங்கள் = பிரம்மாவுக்கு ஒரு நாள்.

இந்திரனின் காலம் பிரம்மாவின் ஒரு வருடத்திலே 5,040 இந்திரர்கள் ஆண்டு மாளுவர். இவ்வாறு ஒரு பிரம்மாவின் ஆயுட்காலத்தில் 5,40,000 இந்திரர்கள் வந்து போவர். இது விஷ்ணுவின் ஒரு நாளாகும். இவ்வாறு விஷ்ணுவின் ஒரு ஆயுட்காலம் உருத்திரனின் ஒரு நாளாகும். -சிவ மகா புராணம் - கற்ப காலம் பிரமதேவனின் பகற்காலத்தில் படைப்பும், இராக்காலத்தில் பிரளயமும் உண்டாகின்றன. அந்தப்பிரளய காலத்தில் பூலோகம், புவர லோகம், சுவர்க்க லோகம் ஆகிய மூன்று உலகங்களும் அழிந்து விடுகின்றன.

பலர் பூலோகம் என்பது எமது பூமியைக் குறிக்கின்றது என்று தவறாக எண்ணுகிறார்கள். பூலோகம் என்பது நாம் வாழும் பூமி உள்ளடங்கிய புவனத்தொகுதி (Galaxy) முழுமையையும் குறிக்கும்.

இந்த கட்டுரைகள் சிவ புராணம் மற்றும் பகவத் கீதையில் இருந்தும் ஜோதிட நூல்களில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன



 
Top