GuidePedia


ஒரு வீட்டில் இரண்டு தீய கிரகங்கள் சேர்த்திருப்பது நல்லதல்ல. செவ்வாய் ரத்தம், உணர்ச்சி வசபடுதல், முன்கோபம், விபத்து, காவல், இராணுவம் போன்றவற்றிக்கு காரகன், சனி மந்த புத்தி, அடிமைபடுத்தல், தொழில், எதிலும் பிடிப்பு இன்மை, நோய்களுக்கு காரகன். செவ்வாய்க்கு எதிர்மறையாக சனியின் காரகம் இருக்கும். எனவே இக்கிரக கூட்டணி எந்த வீட்டில் இருந்தாலும் பிரச்சனை உண்டாகும். உங்களுடைய முயற்சியும் பலிக்காது, மதியாலும் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி என்றால் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

நீங்கள் Bike-இல் போகிறிர்கள் உங்களால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் போக முடியும் என்ற தன்னபிகையை கொடுப்பவன் செவ்வாய் பகவான். சனி உங்கள் மனதை திசை திருப்பி எதையாவது யோசிக்க வைத்து விபத்தில் சிக்க வைப்பவன். எனவே இக்கிரக கூட்டணி இருந்தால் தாச புக்தி காலங்களில் கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோட்சார ரீதியிலும் இரண்டு தீய கிரகங்கள் சேர்த்து இருப்பது நல்லதல்ல, இச்சேர்க்கை இருந்து ஒரு தீய கிரக பார்வை இருந்தால் பூகம்பம், மத கலவரம், சாதிசண்டை, அடி, தடி, வெட்டு, குத்து, கொலை, போராட்டம், அரசு, காவல்துறைக்கு எதிரான போரட்டங்கள், விபத்து, அகோர நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள், என அனைத்தும் அரங்கேறும், வீட்டை பொருத்து இதைல்லாம் மாறுபடும். தீய பலன் கண்டிப்பாக உண்டு. எனவே இக்காலங்கில் நாட்டில் அரங்கேறும் அதர்மத்தை பார்த்து உணர்ச்சி வசபடாமல் அமைதி காட்க வேண்டும்.

ஜாதக ரீதியாக இந்த இரண்டு கிரகங்களும் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டின் காரகங்கள் காலி, அந்த வீட்டை குறிக்கும் உறவு முறையும் காலி, மருத்துவ ஜோதிட ரீதியாக அந்த வீட்டை குறிக்கும் உடல் உறுப்பும் காலி.

மகரம் ராசியில் இக்கூட்டணி நன்றாக வேலை செய்யும் ஏன் என்றால் செவ்வாய்க்கு உச்ச வீடு, சனிக்கு ஆட்சி வீடு. ஆனால் பிரச்சனை குறையாது. தீய கிரகம் வலு பெறுவது நல்லதல்ல.

1இல் செவ்வாய் சனி

லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. தலையில் ஒரு முறையாவது விபத்து ஏற்படும். சட்டன ஏற்படும் கோபத்தால் ஜாதகனை ஒருத்தனும் மதிக்க மாட்டன். தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது. தலையில் ரத்த கட்டி உண்டாகும்.

2இல் செவ்வாய் சனி

ஜாதகனிடம் ஒரு பைசா கூட இருக்காது அப்படி வைத்திருந்தால் கூட இருப்பவர்கள் பிடுங்கி கொண்டு ஓடி விடுவார்கள், கடனில் மூழ்குவான், படிப்பு மண்டையில் ஏறாது, படிப்பை பாதியில் விடுவான். குடுபத்தில் மரியாதை இருக்காது, கெட்ட வார்த்தை பேசுபவர்கள். குடும்பம் அமைவது கஷ்டம்தான். அப்படி அமைந்தாலும் குடும்பத்துடன் இல்லாமல் வேறு எங்கயாவது வெளியே சென்று வாழ நேரிடும். கண் எரிச்சல் உண்டாகும்.

3இல் செவ்வாய் சனி

இளைய சகோதரன் காலி, இளைய சகோதரன் முதல் எதிரி, முன் கோபம் உண்டு, ஆண்மை குறைபாடு ஏற்படும், புகழ், கௌரவம் காலி. மாமனாருடன் சண்டை சச்சரவு ஏற்படும்

4இல் செவ்வாய் சனி

கல்வி தடை, படித்த படிப்பு உதவாது, வீடு பிரச்சனயில் இருக்கும், சிலருக்கு வீடும் இருக்காது, ஒழுக்க குறைவு ஏற்படும், தாயாரின் உடல் உறவு சொல்லும் படியாக இருக்காது. இதய நோய்கள் ஏற்படும்.

5இல் செவ்வாய் சனி

பெற்ற குழந்தைகள் எதிரிகளாக மாறுவார். ஆசை பட்டால் அது நடக்காம போவது போன்றவற்றை ஏற்படும். காதல் விவகாரங்களில் ஈடுபட்டால் அடி உதை வாங்க நேரிடும். மது, மாது, சூது என எல்லா கெட்ட பழக்கம் இருக்கும். சில நல்ல பார்வை உண்டு எனில் குறையலாம்.

6இல் செவ்வாய் சனி

கடன் கழுத்தை அறுக்கும், எதிரிகளால் தொல்லை ஏற்படும், எதிரியை துரத்தி துரத்தி அடிப்பான். அவர்களும் இவரை அடிப்பார்கள். வயிறு வலி அதிகம் ஏற்படும், தொழில் வைத்தால் வேலகாரர்களால் பிரச்னை ஏற்படும். நோய் நிறைத்து காணப்படும்.

7இல் செவ்வாய் சனி

மனைவி எதிரியாவாள், திருமணம் தடை ஏற்படும், துணைவருக்கு நோய் உண்டாகும், நண்பர்களால் பிரச்சனை ஏற்படும், காம வெறியன், பல பெண்ணின் சகவாசம் உண்டு, internal sex organs-இல் பிரச்சனை உண்டாகும்.

8இல் செவ்வாய் சனி

முன் கோபத்தால் தோல்வி, தண்டனை, அவமானம் ஏற்படும், அரசாங்க வழியில் பிரச்சனை கோர்ட், கேஸ், இதை எல்லாம் சர்வ சாதரணமாக பார்பார். முன்னோர் சொத்துக்கள் ஒன்று கூட கிடைக்காது. அந்தரங்களில் பிரச்சனை ஏற்படும். மாமனார் குடுபத்துடன் வம்பு வழக்கு ஏற்படும்.

9இல் செவ்வாய் சனி

இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது. கடவுளுக்கு எதிரான எண்ணங்கள் உண்டாகும். தந்தை இவன் எதிரி. கஞ்சன்.

10இல் செவ்வாய் சனி

தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும். வேலை அல்லது தொழிலில் சக ஊழியர்களுடன் அடி தடியில் ஈடுபடுவார்.

11இல் செவ்வாய் சனி

மூத்த சகோதரன் காலி, இவனுடன் சண்டை ஏற்படும், அயல் நாட்டு உறவில், தொழிலில் பிரச்சனை, ஏன் தான் இதில் ஈடுபட்டோம் என்ற நிலைமைக்கு தள்ள படுவார், முழங்கால் இணைப்பில் பிரச்சனை ஏற்படும்.

12இல் செவ்வாய் சனி

தூக்கம் காலி, பிரச்சினையே இவன் தலைகாணி, வம்பு வழக்குகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். தூர பயணம் கவனம் தேவை. ஏன் தான் பிறந்தோம் என நினைப்பார், கண் எரிச்சல் உண்டாகும். பாதைகளில் வலி உண்டாகும், மறைமுக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.


 
Top