GuidePedia


மருத்துவ ஜோதிடம் ஜோதிட கலையின் ஒரு பகுதி ஆகும் சூரியன், கேது, 6, 12ஆம் இடம் அதிகம் வலுபெற்றவர்கள் இக்கலையில் மிக திறமையாக செயல்படுவார். அக்காலத்தில் ஜோதிடர்களே மருத்துவராக செயல் பட்டார்கள் உரிய காலத்தில் நோய் ஏற்படும் விதமும் அதற்கான மருந்துகளையும் தந்து குணபடுதினர்கள். மருத்துவ ஜோதிடம் முழுமையாக கற்று தெளிய பொதுவாக ஆறு மாத காலமாவது ஆகும். ஒரு மருத்துவ ஜோதிடன் எவ்வாறு செயல் படவேண்டும் என்று பார்போம். மன நோயால் பாதிக்க பட்டவன் அதனால் ஏற்படும் நோய்களை கோவிலுக்கு சென்று வா என்று சொல்லி மனதை திருப்தி படுத்துவதன் மூலம் நோயை குணபடுத்தலாம். ஆனால் ஒரு போதும் மற்ற நோய்களுக்கு இது மாதிரி சொல்ல கூடாது. அதற்கான இயற்கை மருந்துகளை ஆராய்ந்து நோய் தீர்க்கும் கிரக சூழ்நிலைகளை அறிந்து நோயை தீர்க்க வேண்டும். மருத்துவ ஜோதிடனுக்கு கண்டிப்பாக மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும், மேலும் கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காய்கறிகள் மூலிகைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும், நோய் வரும் காலங்கள், தீர்க்கும் காலங்கள் பற்றி அறிய வேண்டும். சரி இப்போது நாம் கிரகங்களால் ஏற்படும் நோய், ராசிகளின் உறுப்புக்கள், விடுகளின் உறுப்புக்கள் பற்றி பார்க்கலாம்.



கிரகங்களால் ஏற்படும் நோய்

சூரியன்

உஷ்ணக்காரன், உஷ்ணம் சம்மந்தமான நோயைக் கொடுப்பார், இருமல், வலிப்பு, வலது கண், புரை சம்மந்தப்பட்ட நோய்கள், தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, இதய நோய், பித்தம், தாகம், வெய்யில் வெப்பத்தாக்கு நோய் உருவாகலாம்.

சந்திரன்

ஜலதோஷம், வாதம், சீதளம், தோல் நோய், குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், கண் நோய்கள், வீக்கம், இரத்தம் அசுத்தங்கள், பகட்டு, வயிறு வலி, பைத்தியம், குளிர் கபசுரம்.

செவ்வாய்

ரத்தக்காரன் என்பதால் ரத்தம் சம்மந்தமான நோய்கள், ரத்தப்புற்று நோய், பிளட் பிரஷர். கண் எரிச்சல், தீக்காயம், விஷம் சம்மந்தப்பட்ட நோய், விபத்துகள், வெட்டுக் காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இரத்த குறைபாடு, இரத்த இழப்பு, இரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், இரத்த சோகை, பித்த நீர், தாகம்.

புதன்

நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்சினைகள், கண், மூக்கு, கழுத்து, இவற்றில் ஏற்படும் நோய், சளி இருமல் தொல்லை, வெண்குஷ்டம் போன்ற நோய்கள், வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தையின்மை, குடல் கோளாறு, தோல் நோய்கள், மன நிலை தடுமாற்றம், படை, சொறி, சிரங்கு, தொண்டைப் புண், டான்சில்கள், ஊமை, வழுக்கை, வட்டப் படை, வெண் குஷ்டம்.

குரு

சர்க்கரை நோய்,காது சம்மந்தப்பட்ட நோய், பித்தம் சம்மந்தப்பட்ட நோய், குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலை.

சுக்கிரன்

கிட்னி சம்மந்தமான நோய், பெண்கள் சம்மந்தமான நோய், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் நோய்கள், கருப்பை கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, இரத்த சோகை, தோல் நோய், கருப்பை நோய்கள், கருக்கலைப்பு.

சனி

யானைக்கால் வியாதி, காலால் ஏற்படும் உபத்திரவம், வயிற்றுவலி, குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சோம்பல், வாயு தொல்லைகள், வாத நோய், கீல்வாதம், குறைபாடுள்ள பேச்சு, பல் வியாதி, அஜீரணம், புண், ஆஸ்துமா

ராகு

இதய நோய், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புற்று நோய், குடல் நோய், குஷ்டம் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் என்பன உண்டாகலாம். கண்புரை, பல் வியாதிகள், அம்மை, தொழுநோய், தற்கொலை, உடல் வலி, திக்குவாய், மண்ணீரல் வியாதிகள், வாத நோய், திடீர் மரணம், கொலை, விபத்துக்கள், பாலியல் முறை கேடு, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், மிருகங்களுடன் பகை, பாம்பு கடி, பைத்தியம்

கேது

வெட்டுகாயம், அம்மை, அஜூரணம், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புண், உடல் வலி என்பன உண்டாகலாம். வெட்டுக்கள், காயங்கள், தொழுநோய், படை மற்றும் புண்கள், தற்கொலை, வயிறு வலி, சிறிய அம்மை, பெரிய அம்மை, புற்றுநோய், திடீர் மரணம், கொலை, பசி, தோல் வெடிப்புகள், பாம்புக்கடி, வைரஸ் காய்ச்சல், கட்டி



ராசிகளின் உறுப்புகள்

மேஷம்

முகம், மூளை.

ரிஷபம்

கழுத்து, தொண்டை, உள்நாக்கு.

மிதுனம்

தோள், விரல், கை, மூக்கு, நுரையீரல், நெஞ்சுக்கட்டு.

கடகம்

வயிறு, மார்பகம்.

சிம்மம்

இருதயம், முதுகு, முதுகுத்துண்டு.

கன்னி

சிறுகுடல், பெருகுடல்.

துலாம்

கிட்னி, தோல்.

விருச்சிகம்

ஆண் பெண் இன உறுப்புக்கள், ரத்தம், காது.

தனுசு

இடுப்பு, தொண்டை, கல்லீரல்.

மகரம்

பல், எழும்பு, முட்டி, தோல்.

கும்பம்

கீழ்க்கால், கணுக்கால், ரத்த ஓட்டம்.

மீனம்

பாதம், பாத விரல், நுரையீரல், குடல், மூத்திரம் முதலிய கழிவுகள் என்பவற்றை குறிக்கின்றது.



வீடுகளின் உறுப்புகள்

1 ஆம் வீடு

தலை, மூளை, தலை முடி, தோற்றம்

2 ஆம் வீடு

ஆணுக்கு வலது கண், பெண்ணிற்கு இடது கண், தைராய்டு, முகம், கழுத்து, தொண்டை, பற்கள்

3 ஆம் வீடு

காது, நுரையிரல், கைகள், நரம்பு மண்டலம்

4 ஆம் வீடு

மார்பு, இதயம், உணவு, மற்றும் மூச்சு குழல்

5 ஆம் வீடு

மேல்வயிறு, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி, இரப்பை, கணையம்

6 ஆம் வீடு

குடல் பகுதி, அடிவயிறு

7 ஆம் வீடு

ஜீரண உறுப்பு, உள்புற அந்தரங்க உறுப்புகள் (ஆண் & பெண்), சிறுநீரகம்

8 ஆம் வீடு

வெளிப்புற அந்தரங்க உறுப்புகள், ஆண்குறி, பெண்குறி, தோல், புஜம், வெளிப்புற உறுப்பு

9 ஆம் வீடு

இடுப்பு, தொடைபகுதி

10 ஆம் வீடு

கல்லிரல், இடுப்பு

11 ஆம் வீடு

முழங்கால் இணைப்பு, எலும்பு

12 ஆம் வீடு

கால்கள் பாதம், ஆணிற்கு இடது கண், பெண்ணிற்கு வலது கண்

 
Top