GuidePedia

லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் சுதந்திரமாக இருக்க ஆசைபடுவான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான் தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான். 7ஆம் இடம் சற்று பலம் குறைந்தால் வரும் மனைவி இவன் பேச்சை கேட்பாள். மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்.

லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான் தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான். தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவான்.

லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான் சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.

லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு கிடைக்கும். உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான் ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். உண்ண உணவு, இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான் சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன் 4ஆம் அதிபதியும் நன்றாக இருந்தால் உயர்கல்வி படித்திருப்பார்கள்.

லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய குழந்தைகளை (இக்காகாலத்தில் 3) பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவை மனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்.

லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும் லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள் சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்.

லக்கினாதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள் எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.

லக்கினாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.

லக்கினாதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் எனவே எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும் ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான் சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.

லக்கினாதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.

லக்கினாதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும். இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்.

லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும் வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்.



2ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார். தனக்காக அதிகம் செலவு செய்பவராக இருப்பார்

2ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர். குடும்பத்திற்காக செலவு செய்பவனாக இருப்பார். குடுபத்தில் உள்ளவர்களிடம் இருந்தும் பணம் வரும்.

2ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும.

2ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு.

2ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

திடிர் என்று பணவரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பணவரவு இருக்கும்.

2ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.

2ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

மனைவி அல்லது கணவன் மூலம் வருமானம் இருக்கும் சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.

2ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

இருந்தால் அவ்வளவு நல்லதல்ல ஏன் என்றால் 8 ஆம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும்.

2ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.

2ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

தொழில் செய்து சம்பாதிப்பார்.

2ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்

2ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

பணம் விரையமாகும்.



3ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

இளைய சகோதரம் இருக்கும் பல வேலைகளை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் கிடைக்கும். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் போகங்களுடன் இருப்பார்கள் வைரம்.நகைகள பெறுவார்கள் சகோதர. சகோதரிகளின் ஆதரவை பெறுவார்கள்.

3ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகளின் ஆதரவில் காலம் கழிப்பவனாகவும் தைரியமில்லாதவனாகவும் உடலில் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள். மூன்றாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.

3ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார்கள் அவர்களால் இவருக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு இருக்கும். கலைகளில் பிரியம் கொண்டவனாக இருப்பார்கள். நல்ல பலசாலியாகவும் இருப்பார்கள். தங்கம், வெள்ளி ஆடை மீது ஆசை இருக்கும் அதுபோல் கிடைக்கும். தெய்வ வழிபாடு கிடைக்கும்.

3ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

சுபபலமிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாகவும் குடும்பத்தில் செல்வமும் சுகமும் நிறைந்து விளங்கும்.

3ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

குழந்தை பாக்கியங்களை பெற்றவனாகவும். சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்றவராகவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக வழிபாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கிடைக்கும்.

3ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பார்கள் உடல் பலமில்லாமலும் இருப்பார்கள் அடிக்கடி நோய் வந்து தொந்தரவு தரும்.

3ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

பெண்களின் மீது ஈர்ப்புடன் இருப்பான். வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பான். தன்னுடைய சுகங்கள் மட்டும் பார்ப்பான். மனைவியின் சொத்துக்களை பெற முயல்வார்கள். நன்றாக சாப்பிடுவார்கள்.

3ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகள் உடன் சண்டை இருந்து கொண்டு இருக்கும். உடல் ஊனம் ஏற்படும். சிரமத்துடன் குடும்பம் நடத்த வேண்டும். சில பேர்க்கு கடன்கள் ஏற்படும். சிலருக்கு அவமானம் ஏற்படும்

3ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

நல்ல தைரியசாலியாகவும் பூர்வ புண்ணியத்தில் நல்ல வசதி பெற்றவராகவும் இருப்பார்கள். தெய்வபக்தியுடன் இருப்பார்கள்.

3ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவர்களாக இருப்பார்கள்.

3ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் இருந்து லாபம் கிடைக்கும்

3ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகள் மூலம் விரையம் ஏற்படும். சொத்துகள் விரையத்தை ஏற்படுத்தலாம். அலைச்சலும் மன சஞ்சலம் ஏற்படும்.



4ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக இருப்பான். வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும். மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான். தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள். கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான். நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன் அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான்.

4ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும் ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.

4ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள். அதாவது நல்ல நிலைமையில் இருப்பார்கள். ஜாதகனைவிட அவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும். கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும். வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல் இருக்கும். நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும்

4ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம் என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும். மற்றவர்களுடைய தொடர்பை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள். ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள். அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம் விசுவாசமாக இருப்பார்கள். பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும். பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழி சொத்துக்களும் கிடைக்கும்

4ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும். ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான். வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான். தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான்.

4ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

4ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள் மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள். நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள். இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது. ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து மனைவி கிடைப்பாள். சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள். அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக் கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி மாற்றுவார்கள்.

4ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான். அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது. தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள். சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத் தரமுடியாது. ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான். வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக் கிடைக்காது. உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள். இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப் போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம் அவ்வளவுதான்.

4ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான். நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள், செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும் இருப்பான். ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு மிகுந்து இருக்கும் நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத அமைப்பாகும். நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.

4ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம் கிடைக்கும். தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும். அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டுவார்கள் ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான். எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும் உணரும்படி செய்யக்கூடியவன். வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

4ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான். சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும். இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு.

4ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

நன்மை எதுவும் இல்லாத அமைப்பு. சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது. வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும், வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக் காணாமல் போய்விடும் மொத்தத்தில் சிரமமோ சிரமம்.



5ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழும். மஹான்களிடம் ஆசி பெறுவான் அரசாங்கத்திலும் மக்களிடம் நல்ல பெயர் பெற்று விளங்குவான்.

5ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

பிள்ளைகளால் தனம் சந்தோஷம் நிறைந்து இருக்கும், பக்தி விசுவாசத்துடன் பிள்ளைகள் இருப்பார்கள் கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல வருமானம் குடும்பத்திற்க்கு கிடைக்கும்.

5ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் உண்டாகும். புராணங்கள்இ சாஸ்திரங்கள் மீது ஈடுபாடு இருக்கும். பிள்ளைகளால் ந்ன்மை ஏற்படாது.

5ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் ஏற்படும் வண்டி வாகனம், நிலபுலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தை கௌரவத்துடன் நடத்துபவராக இருப்பார்.

5ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரர்கள் உயர் பதவிகளில் இருப்பார்கள் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவார்கள் கல்வியில் நல்ல ஞானம் இருக்கும். அரசாங்கத்தில் உயர்பதவிகள் வசிப்பார்கள். ஐந்தாம் வீட்டில் சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் ஏற்படும்.

5ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்பட்டாலும் எதிரிகளாக மாறுவார்கள். புத்திரர்களால் நன்மையோ லாபமோ ஏற்படாது. இவர்களுக்கு ஞாபசக்தி குறைவு. பெரியவர்களிடம் விரோதம் ஏற்படும்.

5ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் ஏற்படும். திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவியின் குடும்பத்தாரால் மனஅமைதி குழையும்.

5ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் ஏற்படும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார். நல்ல வருமானம் இருக்காது.

5ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

புத்திர விருத்தி இருக்கும். புத்திரர்களால் சந்தோஷங்களும் சுகமும் ஏற்படும். கல்வியில் பிரகாசத்துடன் விளங்குவார்கள். தெய்வீக வழிபாடுகளில் பற்றுதலுடன் இருப்பார்கள்.

5ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள். மதங்களை பரப்புவதில் ஆர்வம் இருக்கும். புத்திரர்களால் நல்ல தொழில்கள் அமையும்.

5ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடையும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

5ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருக்கமாட்டார்கள். குடும்பம் அமைதி இல்லாமல் இருக்கும்.



6ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.

6ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

வாக்குவன்மை இருக்காது நல்ல பேச்சு இருக்காது. அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வார்கள். கல்வி வராது. கண் கோளாறு இருக்கும்.

6ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

6ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

தாயாருடைய உடல் நலம் பாதிக்கப்படும் நிலம் வீடுகள் இருந்தாலும் வருமானம் இருக்காது. கடன்களால் அந்த சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும்.

6ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

புத்திரதோஷம் ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகமாகும் எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பார்கள் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவகிக்க வேண்டும். பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள்.

6ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

கடன் தொல்லை படுத்தி எடுத்துவிடும். சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம் இருக்கும்.

6ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

இல்லற வாழ்க்கை கசக்கும். இருவருக்கும் விவாகரத்துவரை கொண்டுவிடும். மனம் அமைதி இருக்காது.

6ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

எட்டாம் வீட்டில் வறுமைகள் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி வரும்.

6ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

தந்தை வழி சொத்து நாசமாகும். பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள். பெரியவர்களுடன் சண்டை ஏற்படும்.

6ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

சம்பாதிக்கும் வழி திருட்டுதனமாக இருக்கும். பிறர் பொருளையே நம்பி இருப்பான். ஊர் சுற்றி திரிவான். மக்கள் மனதில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பான். சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி பெருவான்.

6ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

ஆறாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் வியாதியுடன் இருப்பார்கள் கடன் இருக்கும். சிலபேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.

6ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

ஆறாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும. அனாவசியமான செலவு இருக்கும. குறியில் நோய் ஏற்படும்.



7ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.

7ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

மனைவியின் மூலம் சொத்துக்கள் வரும். மனைவியின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். மனைவியின் மூலமும் உறவினர்கள் மூலமும் உதவி இருக்கும்.

7ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

களத்திரதோஷம் மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமமோ பற்று இருக்காது.

7ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவான். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் யோக்கியத்தை அம்சங்களையும் அவனுக்கு வரும் மனைவி பெற்று இருப்பாள்.

7ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

களத்திர தோஷம் பெற்றவனாக இருப்பான் சினிமா போன்றவற்றில் ஈடுபாடு இருப்பான். காதல் மணம் முடிப்பான் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.

7ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

மனைவி வியாதிகள் கொண்டவளாக இருப்பாள். கணவனுக்கு எதிராக கலகங்கள் விரோதங்கள் செய்வாள் மனைவியினால் ஆதரவு இருக்காது.

7ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் மனைவியின் வீட்டில் அடிமையாக இருப்பான் மனைவியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.

7ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

அவனுக்கு வரும் மனைவியினால் அவன் கஷ்டங்களை வறுமைகளை அனுபவிப்பான். குடும்பத்தை ஓழுங்காக நடத்தும் பொறுப்பு அற்றவளாகவும் வீனான ஆசை கொண்டவளாகவும் வருமான குறைவுடனும் இருப்பாள்.

7ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

பெரியவர்களின் அனுக்கிரக்தாலும் பூர்வ புண்ணியத்தாலும் சிறு வயதில் திருமணம் நடைபெறும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.

7ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

மனைவியால் சம்பாத்தியம் இருக்கும். சொத்துக்களும் நகைகளும் சேரும்

7ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் அந்தஸ்துடன் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும்.

7ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

மனைவியினால் அதிகமான தன சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க்கை வாழ ஆசைபடுவாள். கடன்கள் வாங்கியும் சொத்துக்கள் விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கும்.



8ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால். கடனிலேயே வாழ வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை கூடவே இருக்கும் எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் வறுமையில் வாழ நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். விபத்துக்கள் நேரிடும்.

8ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

8ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும். மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

8ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

8ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

8ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

அற்ப ஆயுள், உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளும் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

8ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.

8ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு: மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும். எட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

8ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும். இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்

8ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும். இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும். எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

8ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான். எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.

8ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள். ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும். சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான். எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்



9ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்: நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும். சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் தன் தந்தை, பெரியவர்கள், குரு ஆகியோரின் மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டான். மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான். உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் இணைந்து, லக்கினத்திலோ அல்லது வேறு நல்ல இடங்களிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால்மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும்.

9ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார். தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன் தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில் இருக்கும். நன்றாக இல்லாவிட்டால் பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.p>

9ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால் பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன், சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும். வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.

9ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான். உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும். இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும். ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள் அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.

9ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும் இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள். ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும். ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார். மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வான்.

9ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை அடையமுடியும். நன்றாக இல்லாவிட்டால் தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக் கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும். பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல! எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார். அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்.

9ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

9ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின் சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும். வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடுவான். தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும். இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.

9ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார். தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில் வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர் அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில் வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.

9ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான். அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும். சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர் அமைச்சராகக்கூட ஆவதுண்டு. தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான்.

9ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே இருப்பார் நன்றாக இல்லாவிட்டால் நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும் சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில் செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்.

9ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை இழக்க நேரிடும். நன்றாக இல்லாவிட்டால் ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக் கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார். எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல! பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும் பாதிக்கும்.



10ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான். தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான். இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.

10ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும் தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள். பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷடங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.

10ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும் விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்.

10ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்.

ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடை யவராக இருப்பார். இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார். தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங் களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர் களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

10ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள். அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த முயல்வார்கள்.

10ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

10ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார். அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள் உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.

10ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள் பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப் 11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் அமையும்.

10ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர் களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய வராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டு தலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்.

10ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்.

10ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலரலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை உடையவர்களாக இருப்பார்கள்.

10ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முரையற்று நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும் அவ்ற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்கு தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.



11ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால் ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான். எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்குடனும் இருப்பான்.

11ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வான்.

11ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின் மூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள் அவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.

11ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு இடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன் வாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில் செல்பவர்களாகவும் இருப்பார்கள்.

11ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனின் புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம் விளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து பெரும்பொருள் ஈட்டுவார்கள்.

11ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

வரும் லாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க நேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள் உண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்.

11ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு அவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும். திருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும் சிறப்புப் பெற்று விளங்குவான்.

11ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான். செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்.

11ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச் செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.

11ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான். ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

11ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும். வயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.

11ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள், வியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும் இருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.



12ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான். ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான்.

12ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல்படுவான். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவான். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வான். வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிட முடியாது. கண் பார்வை மங்கிவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. பன்னிரெண்டாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து வலுவாகவும் இருந்து இதே இடத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கூறிய குறைகள் குறைந்து, பணம் கையில் தங்கும் அமைப்புடன் இருப்பான். அதோடு எதையும் சமாளிக்கும் பேச்சுத் திறமை உள்ளவனாக இருப்பான். பன்னிரெண்டாம் அதிபதி இங்கே தீய பார்வைகளுடன் அமர்ந்திருந்தால் ஜாதகன் வாயைத் திறந்ததலே அது சண்டை, சச்சரவுகளில் போய் முடிவதாக இருக்கும்.

12ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பான். அவன் தன்னுடைய சகோதரனை இழக்க நேரிடலாம். எப்பவும் அழுக்கான தோற்றத்துடன் திரிபவனாக இருப்பான்.தீயகிரகங்களின் பார்வை இங்கே வந்து அமரும் கிரகத்தின் மீது விழுந்தால் ஜாதகனுக்குக் காது சமபந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் (பார்க்கும் தீய கிரகத்தின் தசா புத்திகளில் உண்டாகும்) ஜாதகன் தன் உடன்பிறப்புக்களுக்காக பணத்தை அதிகமாக செலவிட நேரிடும் ஜாதகன் எழுத்தாளனனால், வெற்றி பெற்ற எழுத்தாளனாக முடியாது. கூட்டத்தோடு கூட்டமாக வேலை செய்ய நேரிடும். அதிக வருமானமும் இருக்காது.

12ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்

சிறுவயதிலெயே தாயை இழக்க நேரிடும். மனப் போராட்டங்கள் நிறைந்திருக்கும் தேவையில்லாத கவலைகள் வாட்டும். உறவினர்களில் சிலர் விரோதமாக இருப்பார்கள்.குடியிருக்கும் இடங்களில் வீட்டுக்காரனின் தொல்லை இருக்கும். நிம்மதி இருக்காது.சாதாரண பேட்டைகளில் குடியிருக்க நேரிடும். பன்னிரெண்டாம் இடத்து அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் அதிகமாகி அனுதினமும் தொல்லை கொடுப்பதாக இருக்கும். ஜாதகனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், சொந்த வண்டி வாகனங்கள் இருக்கும் ஆனாலும் இந்த அமைப்பால் அதுவும் பிரச்சினை தருவதாகவே இருக்கும்.

12ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால் பிரச்சினை இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.மிகுந்த இறைபக்தி உடையவனாக இருப்பான். நினைத்தால் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவான். துணிவில்லாத வனாக இருப்பான்.மனப்போராட்டங்கள் உடையவனாக இருப்பான். தான்தான் உலகத்திலேயே அதிகமாகத் துன்பப்படுபவனாக நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் வருத்தத்திலேயே மூழ்கி விடுவான். இந்த அமைப்புள்ளவன் விவசாயம் செய்தால், அவன் தோட்டத்துப் பயிர்களுக்கு அடிக்கடி, பூச்சிகளாலும், செடி நோய்களாலும் அழிவு வந்து, அதனால் அவதிப்படுவான்.

12ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.செழிப்புள்ள வனாக இருப்பான். எல்லா வசதிகளும் நிறைந்தவனாக இருப்பான்.ஆரோக்கியமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பான், எதிரிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு ஒன்றும் இல்லாத வர்களாக ஆக்கிவிடுவான். சிலசமயம் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.ஆனாலும் முடிவு அவனுக்குச் சாதகமாகவே அமையும். இதே அமைப்பில், இந்த இடம் தீய கிரகத்தின் பார்வை பெற்றால் (அதாவது வந்து அமரும் பன்னிரெண்டாம் அதிபதி, தீய கிரகத்தின் பார்வை பெற்றால்) பாவச் செயல்களைச் செய்வான்.சட்டென்று கோபப்படுபவனாகவும், சட்டென்று உணர்ச்சி வசப்படுபவனாகவும் இருப்பான். சிலருக்குத் தன் தாயையே வெறுக்கும் சூழ்நிலை உண்டாகும். பெண் பித்தனாக இருப்பான். அதனால் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

12ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு மிகவும் வறுமையில் வளர்ந்தவள் மனைவியாகக் கிடைப்பாள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும். சிலருக்கு பிரிவில் முடிந்துவிடும் அப்படி மனைவியைப் பிரிந்த ஜாதகன் சன்நியாசியாக மாறிவிடுவான். சிலர் உடல் உபாதைகளாலும், உணர்வுப் போராட்டங்களாளும்ச் சீக்காளியாகி பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள். எதையும் கற்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.அதே போல சொத்து சுகங்களும் இல்லாமல் போய்விடும்.

12ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். மக்களால் அறியப் பட்டவனாக இருப்பான். சொகுசான் வாழ்க்கை அமையும். பல வேலையாட்கள் வேலை செய்ய செள்கரியமான வாழ்க்கை வாழ்வான். பிறர் மரணத்தால், இவனுக்கு சொத்துக்கள் கிடைக்கும் அமைப்பு உண்டு. சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடைய வனாக இருப்பான். தர்ம சிந்தனைகள் உடையவன், புகழுடையவன். அன்புடையவனாக நட்புடையவனாக இருப்பான். நல்ல பண்புகளை உடையவனாக இருப்பான். அதன் மூலம் பலரையும் கவரக்கூடியவனாக இருப்பான்.

12ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்

வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாதகன் இருப்பான். அதிகமான சொத்துக்கள் சேரும். நேர்மையானவனாக இருப்பான், பெருந்தன்மை உடையவனாக இருப்பான். தந்தையை இளம் வயதிலே பறிகொடுக்க நேரிடும்.

12ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்

கடின உழைப்பாளி. வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சிலருக்குச் சிறைக் காவலர் வேலை கிடைக்கும். சிலருக்கு மருத்துவத் துறையில் வேலை கிடைக்கும். சிலர் மாயானங்களில் பணி செய்ய நேரிடும். ஜாதகனுக்கு தன் குழந்தைகளால் எந்த செளகரியமும், மகிழ்ச்சியும் கிடைக்காது

12ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான். அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது. குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள் சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக் கைப் பொருளை இழக்க நேரிடும்..

12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்

பன்னிரெண்டாம் அதிபதி தன் சொந்த வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தர்மச் செலவுகளை அதிகமாகச் செய்பவனாக இருப்பான். நல்ல கண் பார்வை இருக்கும். அதீதமான படுக்கை சுகம் கிடைக்கும். சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள் இந்த அமைப்பை ஒரு தீய கிரகம் பார்த்தால், ஜாதகன் ஓய்வு ஒழிச்சல் இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டிருப்பவனாகவும் இருப்பான்.



 
Top