GuidePedia

பற்களை வெண்மையாக்க

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்கி, வலிமையாக்க எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்யலாம்:

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 3 நிமிடம் ஊற வைத்து பின் பற்களை நன்கு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 3 வாரங்களுக்கு 3 முறை செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும்.

காஃபி, டீ மற்றும் புகைப்பழக்கம் இதனை கைவிடுதல் வேண்டும். இது கரைகளை பற்களில் உண்டாக்கும், மேலும் காபி பித்ததிருக்கு வழி வகுக்கும்.

பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கினால் பற்களில் உள்ள கறை நீங்கும், இந்த் உப்புக்களை அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் பற்களின் எனார்மல் பாதிக்கப்படும்.

இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி, வலிமையை அதிகரிக்கும்.



பல் சொத்தைகளை நீக்க
பல் சொத்தை வருவது ஏன்?

பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம்.

கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது பல், ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு Crown என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு Root என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் Pulp என்று பெயர். இதைச் சுற்றி Dentine எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் எனாமல் எனும் கடினமான பகுதியும் உள்ளன.

பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பல் சொத்தை வருவது ஏன்?

சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பின் பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.



சிகிச்சை

எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.

எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், வேர் சிகிச்சை என்று அழைக்கப்படும் Root canal treatment செய்யப்பட வேண்டும்.

Root canal treatment

ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் நீக்கி, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

சொத்தையைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை

சாப்பிட்ட உடன் பல் துலக்க வேண்டும்.

பால், டீ, சாப்பாடு சாப்பிட்ட உடன் பற்களை கழுவ வேண்டும்.

ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

வைட்டமின்-சி, வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ள பொருள்களை எடுத்து கொள்ள வேண்டும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.



இயற்கை மருத்துவம்

குப்பை மேனி இலையில் சிறிது உப்பு கலந்து இரண்டு, மூன்று நாட்கள் பல் துலக்குங்கள். பல் வலி, பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல் முதலிய பல் சம்பந்தமான சகல பிரச்னைகளும் நீங்கி விடும்.

3 அல்லது 4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் சரிசெய்யலாம்.

 
Top