GuidePedia

முகபரு எப்படி வருகிறது

இன்று இளம் வயதினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனை முகபரு. நம் தோலில் எண்ணெய் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால் சீபம் எனும் எண்ணெய் பொருளை சுரக்கின்றன. இந்த சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்து கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது. மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால் தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேர சேர தோலில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு. அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும். பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இது சீழ்க்கட்டி பருக்கள் என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.



முகபரு எப்படி வருகிறது

1. மஞ்சள் கிழங்கு உபயோகபடுத்துங்கள். ஆண்கள் தயவு செய்து உபயோகபடுத்துங்கள் மீசை மற்றும் முடியில் படாதவாறு உபயோகபடுத்துங்கள்.

2. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி என்றால் உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும் இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. பருக்களை விரல்களால் தீண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். அதற்காக நாம் அதை நீக்காமல் இருக்க முடியாது. வெள்ளை நிறத்தில் இருக்கும் பொது மட்டும் அதை முறையாக நீக்கி விட்டு உடனே சோபில் கழுவ வேண்டும். அப்போதுதான் அது பரவாது.

4. கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

5. முகத்தை இறுக்கமாகவும் மூடதிர்கள்

6. பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.

7. பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் பருக்கள் இல்லாமல் மறைந்து போகும்.

8. கடலை மாவு, வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும்.

9. பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

10. வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் மறைந்து முகம் பளிச்சிடும்.

 
Top