GuidePedia

டெங்கு



வகைகள்

டெங்கு காய்ச்சல், டெங்கு குருதி காய்ச்சல், டெங்கு ஷாக் சின்ட்ரோம் 3 வகை காய்ச்சல் பரவுகிறது.


ADS கொசு

கொசுக்கள் அனாஃபிலினே, க்யூலிசினே ஆகிய இரண்டு வகைகள் உள்ளன, ஆண் கொசு கடிக்காது அனால் பெண் கொசு கடிக்கும் தன்மை உடையது. நல்ல நீரில் பெண் ஏடிஸ் கொசு இடும் முட்டை நீரின் மேல் அமைந்திருக்கும். 7 நாட்களுக்குள் இந்த முட்டை குடம்பியாகவும் பின்னர் கூட்டுபுழுவாகவும் மாறி பின்னர் கொசுவாக உருப்பெற்றுகிறது. ஒரு பெண் கொசு 100 முதல் 200 முட்டையிடும். ஒரு முட்டை 12 மாதம் வரை உயிர் பெறும் திறன் உடையது. ஏடிஸ் கொசுவாக மாறிய பின்னர் 3 முதல் 4 வாரங்கள் வரை உயிர் வாழ்ந்தன. அதற்குள் பலரை கடித்து அவர்களை உயிரிழப்பு வரை கொண்டு செல்கின்றன. தற்போது இவற்றின் வாழ்நாள் 40 நாட்கள் வரை உயர்ந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக ஏடிஸ் ெகாசுக்கள் வீரியம் மிக்கதாக மாறியுள்ளதால் சுகாதார துறைக்கு சவாலாக மாறியுள்ளது. வருமுன் காப்பது தான் அரசின் கடமை. அதை சுகாதார துறை உணர்ந்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் உயிர்களை தடுக்க முடியும்.


அறிகுறி

கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, உடல்வலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்


தடுக்கும் வழிமுறைகள்

* வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசு பேட், கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* குழந்தைகள் உறங்கும் பொழுதும் வெளியில் விளையாடசெல்லும் பொழுதும் முழுகால் சட்டை மற்றும் முழு கைசட்டை அணிய செய்ய வேண்டும்.

* மாலை நேரங்களில் முக்கியமாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்.

* நில வேம்பு கக்ஷாயாம் குடிக்க வேண்டும்


Download as PDF
 
Top