GuidePedia


எதிரியை பற்றி சொல்லும் இடம் 6ஆம் இடம், மேலும் மறைமுக எதிரிகள் பற்றி குறிப்பிடும் இடம் 12ஆம் இடம் ஆகும். எதிரிக்கு காரகன் செவ்வாய் பகவான் ஆவார், இந்த காலங்களில்தான் எதிரிகள் உருவாகுகிறார்கள். மேலும் இது ஜாதகத்தை பொருத்து நமது பார்வையில் மற்றவர்களை எதிரியாக நினைகின்றோம். இதனால் அவரும் கோபமாகி எதிரி ஆகி விடுகின்றனர். சரி இப்போது எதிரிகளை பற்றி பார்க்கலாம். பொதுவாக 6ஆம் அதிபதி வலிமையாக ஆட்சி உச்சம் பெற கூடாது. அப்போதுதான் எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஆனால் நோயால் (வயிற்றுவலி போன்ற நோய்கள்) அவதிபட நேரிட வாய்ப்பு அதிகம்.



பல்வேறு ஸ்தான அதிபதிகள் ஆறாம் வீட்டில் இருந்தால் ஏற்படும் பலன்கள்

1ஆம் அதிபதி 6இல் இருந்தால்

நமக்கு நாம் தான் எதிரி. இந்த உலகம் தீயது, உலகில் அதர்மம் உள்ளது, மற்றவர்கள் நமக்கு தீயது செய்கிறார்கள் என நினைத்து கொண்டு நமக்கு நாமே அழிவை ஏற்படுத்தி கொள்கிறோம்.

2ஆம் அதிபதி 6இல் இருந்தால்

வரவு செலவு அதிகமாகி குடும்பம் எதிரி ஆகிவிடுகிறது நமது பணம் எதிரிகளிடம் போய்விடும் அல்லது வட்டிகரனிடம் போய்விடும்.

3ஆம் அதிபதி 6இல் இருந்தால்

நம் இளைய சகோதரன் நமக்கு எதிரியாகிறான். மாமனாரின் இடம் என்பதால் மாமனார் வீட்டில் அதிகமாக சகவாசம் வைத்திருந்தால் அவரிடம் சண்டை வரும். நம் வீரியம் கெட்டுபோகிறது. இதனால் தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டு.

4ஆம் அதிபதி 6இல் இருந்தால்

அம்மாவே எதிரியாகிவிடுகிறார் ஒற்றை மகன் என்றால் விதிவிலக்கு ஆனால் திருமணம் ஆன உடன் பிரச்சனை உண்டு. சிலர் மட்டும் எப்போதும் அம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அம்மாவும் நோயாளியாக இருப்பார்.

5ஆம் அதிபதி 6இல் இருந்தால்

5ஆம் அதிபதி 6ல் இருக்கும்போது, எதிரி நம்மை வெற்றி கொள்வார். நம் சொத்து நம் எதிரிகளுக்கு போய்விடும். அதிர்ஷ்டம் எப்போதும் நம் எதிரிகளுக்கே. பிள்ளைகளால் பிரச்சனை.

6ஆம் அதிபதி 6இல் இருந்தால்

எதிரிகளை பற்றி கவலை இல்லாதவர் எதிரி என்று யாரையும் நினைக்க மாட்டார்கள் யாராவது பகைத்தால் கூட அவரை இந்த ஜாதகர் விலகிவிடுவார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளி கூடத்தில் ஒருவன் இன்னொருவனை தோற்கடிக்க நன்றாக படிக்கிறான் மேலே வருகிறான் ஆனால் 6ஆம் அதிபதி 6லே உள்ள ஜாதகர் 100 மார்க்குக்கு முழு கவனம் செலுத்தி படித்து முன்னேறுகிறார். லக்னாபதியுடன் சேர்த்து இருந்தால் நெருங்கிய உறவுடன் பகை.

7ஆம் அதிபதி 6இல் இருந்தால்

மனைவி எதிரி ஆகிவிடுவாள் சுபக்கிரக பார்வை என்றால் விதிவிலக்கு உண்டு. புருஷனுடைய அந்தஸ்து கௌரவம் காலி, வெளியே சென்று தவறு தவறாக சொல்லி விடுவாள். சுக்கிரன் நன்றாக இருந்தால் விதி விளக்கு உண்டு மேலும் அவருடைய ஜாதகத்தையும் பார்ப்பது முக்கியம்.

8ஆம் அதிபதி 6இல் இருந்தால்

எட்டாம் அதிபதி துருதிஷ்டம், தோல்விக்கு அதிபதி ஆவார். இங்கிருக்கும் எட்டாம் அதிபதி எதிரியை ஒழித்துகட்டுவார். எதிரி முன்னேர மாட்டன். இது யோக அமைப்பு என்றாலும் பூர்வீக சொத்தால் பிரச்சனை ஏற்படும். கோர்ட் கேஸ் போக வாய்ப்பு அதிகம் சுப கிரக பார்வை என்றால் வெற்றி உண்டாகும்.

9ஆம் அதிபதி 6இல் இருந்தால்

தந்தை எதிரி ஆவார், அல்லது நோயாளியாக பிரச்சனை தருவார். கோபமான கடவுள்களை பகைத்தல் அல்லது தாழ்த்தி பேசினாலோ இவன் காலி.

10ஆம் அதிபதி 6இல் இருந்தால்

வேலை அல்லது தொழிலில் எதிரிகள் இருப்பார்கள். கண் திருஷ்டி அதிகம். தொழிலால் கடன் அதிகரிக்கும். சில பேர் கடன் வாங்கி தொழில் வைத்து பிரச்சனையை வளர்த்து கொள்வர். சுப கிரக பார்வை பெற்றால் முன்னேற வாய்ப்பு அதிகம் 2ஆம் அதிபதி நன்றாக இருந்தால் பண பிரச்சனை இருக்காது.

11ஆம் அதிபதி 6இல் இருந்தால்

மூத்த சகோதரன் எதிரியாகிறார். அவர் வழியாக எதாவது பிரச்சனை ஏற்படலாம். இப்பொது இல்லை என்றாலும் வருங்கலத்தில் உண்டு.

12ஆம் அதிபதி 6இல் இருந்தால்

விரய செலவுகள் இருக்காது. அதே சமயம் தூக்கமும் கெடும். எதிரிகளின் பிரச்சனையை தலகாநியாக வைத்து தூங்குவார்கள். அல்லது எதாவது ஒரு பிரச்சனையை வைத்து கொண்டு தூங்குவார்கள். தூக்கத்துல நடக்குற வியாதி, தூக்கமே வர மாட்டேங்குது என புலம்புபவர்கள் இவர்கள்தான்.



ஆறாம் அதிபதி வெவ்வேறு ஸ்தனங்களில்

6ஆம் அதிபதி 1இல் இருந்தால்

சுபகிரக பார்வை இருந்தால் ராணுவம், காவல்துறையில் பணி புரிவார்கள். எதிரிகள் இவனிடம் சிக்குவார்கள். பிரச்சனை எப்போதும் இருக்கும்.

6ஆம் அதிபதி 2இல் இருந்தால்

எதிரியை தோற்கடித்து சம்பாதிப்பான். இந்த பணம் அடுத்தவன் வயிற்றேறிச்சையில் வந்தது எனவே சீக்கிரம் காலியாகி விடும். கடன் வாங்கிவிட்டு ஓடி விடுவான் அல்லது ஏமாற்றி விடுவான்.

6ஆம் அதிபதி 3இல் இருந்தால்

தீய கிரக பார்வை எனில் இவனே கடைசி ஆண்மகன் தம்பி இருந்தால் பிரச்சனைதான்.

6ஆம் அதிபதி 4இல் இருந்தால்

அம்மாவை கைவிட்டுவிடுவான், வாழ்வில் சந்தோசம் இருக்காது. வீடு சுத்தமாக இருக்காது.

6ஆம் அதிபதி 5இல் இருந்தால்

இவனால் குழந்தைக்கு ஒரு நன்மையும் இருக்காது. பெற்ற குழந்தைகளை பற்றி தவறாக வெளியே சொல்பவன்.

6ஆம் அதிபதி 6இல் இருந்தால்

எதிரிகளை பற்றி கவலை இல்லாதவர் எதிரி என்று யாரையும் நினைக்க மாட்டார்கள் யாராவது பகைத்தால் கூட அவரை இந்த ஜாதகர் விலகிவிடுவார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளி கூடத்தில் ஒருவன் இன்னொருவனை தோற்கடிக்க நன்றாக படிக்கிறான் மேலே வருகிறான் ஆனால் 6ஆம் அதிபதி 6லே உள்ள ஜாதகர் 100 மார்க்குக்கு முழு கவனம் செலுத்தி படித்து முன்னேறுகிறார்.

6ஆம் அதிபதி 7இல் இருந்தால்

குழந்தை பிறந்த உடன் மனைவிவியை கண்டுகொள்ளாதவன். அதாவது அவள் தேவையை பூர்த்தி செய்தவன். மனைவியின் பேச்சுக்கு மரியாதை கிடையாது.

6ஆம் அதிபதி 8இல் இருந்தால்

மற்றவர்களை இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.

6ஆம் அதிபதி 9இல் இருந்தால்

தந்தையை இவன் கைவிடுவான். தான் பிறந்த மதத்தை அவதூறாக பேசுபவன். சுப கிரக பார்வை எனில் விதிவிளக்கு.

6ஆம் அதிபதி 10இல் இருந்தால்

வேலைகாரர்கள் அடிகடி போராட்டம் நடத்துவார்கள். வேலைகாரர்களை கொடுமை படுத்தி சம்பாதிக்க கூடியர்வகள். மதம் என்ற பெயரில் ஏமாற்றுபவன்.

6ஆம் அதிபதி 11இல் இருந்தால்

தீய பார்வை இருந்தால் ஏழ்மை எதிரி மூத்த சகோதரனுக்கு தொந்தரவு தருபவன்.

6ஆம் அதிபதி 12இல் இருந்தால்

இவனால் மற்றவர்களுக்கு தொல்லை.



கிரகங்கள் 6இல் நின்ற பலன்

சூரியன்

எதிரிகள் இவனை கண்டால் ஓடி விடுவர். அரசியலில் இவர்கள் நுழைந்தால் இவனை பற்றி எவனும் தவறாக பேசமாட்டன். அதிகாரத்தை உபயோக படுத்தி எதிரிகளை அடக்குவன். அடியாட்கள் இருப்பர் இதற்க்கு அர்த்தம் பிரச்சனை என்றால் நாலு பேர் வருவார்கள். கோர்ட் கேஸ் பிரச்சினை இருக்கும் (சண்டை என்று வந்தால் மட்டுமே)

சந்திரன்

என்னதான் எதிரி இருந்தாலும் பிரச்சனை அவர்க்கு ஏற்பட்டால் உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். சில பேர் அமைதி என்ற பெயரால் ஏமாற்றுகிறாயா என்றும் கேட்பார்கள். பெண்களால் பிரச்சனை ஏற்படும்.

செவ்வாய்

எத்தனை வழக்கு போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியே வருவார். எதிரிகளை ஓட ஓட அடிப்பான். மனதுக்கு காரகன் சந்திரன், 9ஆம் அதிபதி, குரு பலம் குன்றினால் எதிரிகளை கொலை செய்வான். கோர்ட் கேஸ் பிரச்சினை இருக்கும் (சண்டை என்று வந்தால் மட்டுமே)

புதன்

2ஆம் இடமும் சேர்த்து பலவீனமானால் எதிரிகளை கேலி கிண்டல் அடித்து எதிரிகளின் கௌரவத்தை சாய்ப்பான். எதிரிகளை பற்றி இல்லாததையும் பொல்லாததாயும் சொல்வான். இதனால் இவனும் பிரச்சனையால் மாட்டுவான்.

குரு

எதிரி பலமானவர்களாக இருப்பார். யாரும் நம்மை மதிக்கவில்லை என்ற புலம்பல் இருக்கும்.

சுக்கிரன்

மனைவியால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலையில் எச்சரிகையாக இருக்க வேண்டும்.

சனி

எதிரிகள் என்னதான் செய்தாலும் சகித்து கொண்டு போவார்கள். எதிரி உருவானால் அந்த இடத்தை விட்டு விலகியவுடன் அவரும் காணமல் போய் விடுவர். பொதுவாக 6இல் சனி அவ்வளவு எதிரி இருக்க மாட்டார்கள். ஆனால் கோர்ட் கேஸ் பிரச்சினை இருக்கும் (சண்டை என்று வந்தால் மட்டுமே)

ராகு & கேது

எதிரிகள் இவனை கண்டு அஞ்சுவார்கள் அதே போல் எதிர்ப்புகளும் இருக்கும்.



மேலும் சில

☻குரு பார்வை இருந்தால் 6இல் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்.

☻6ஆம் இடம் சகோதரர்கள், பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களின் மகன்கள் மற்றும் பங்காளிகளை குறிக்கும். சொத்து பிரச்சினை, வில்லங்கம் எல்லாம் இவர்கள் மூலம் வந்தால் இவர்கள் நம்மிடம் தோற்க வேண்டுமானால் 6ஆம் அதிபதி வலிமையாக இருக்க கூடாது. அப்போதுதான் இவர்களுக்கெல்லாம் நாம் தலைவனாக முடியும் பிரச்சனை என்று வரும் பட்சத்தில்.

☻ஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் அமர்ந்தால் தீமையான பலன்களே நடக்கும்.

☻6,8,12 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மறைய கூடாது. அதன் காரகத்துவங்களும் அதன் மூலம் கிடைக்கும் சுகங்களும் மறைந்துவிடும்.

தொடரும் மறைமுக எதிரிகளை பற்றி (reload after two week 15/4/2018)....

 
Top