GuidePedia


கருப்பான உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்ற


• இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• கற்றாழையில் உள்ள ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வர, கருமை நீங்கி, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிறம் கிடைக்கும்.



• பீட்ரூட்டுகளை துண்டாக நறுக்கி அதை பிரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.

 
Top