வெந்தயம்
வெந்தயத்தை பொடியாக அரைத்து இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவிட வேண்டும். இதனால் முடி நன்கு வளரும்.
பால்
பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன. எனவே இரவில் தூங்குவதற்கு முன்பு, பாலை புருவத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியின் வேர்களுக்கு ஈரப்பசையைத் தந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கற்றாழை

இது முக்கியமான பொருளாகும், கூந்தலில் எதாவது புண் இருந்தால் கூட அதை நீக்கும் வல்லமை உடையது. இரவில் தூங்கும் போது இதன் ஜெல்லை புருவத்தின் மேல் தடவினால் புருவத்தில் உள்ள புண் நீங்கி அதன் வளச்சியை தூண்டும்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர் புருவத்தின் வளச்சியை அதிகரித்து வேகமாக வளர செய்யும் எனவே வெங்காய சாற்றை புருவத்தில் தடவி வர புருவம் நன்றாக வளரும்.
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய்
எலுமிச்சையின் தோலை தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுத்து, மறுநாள் காலையில் கழுவிட வேண்டும். சிலருக்கு எலுமிச்சையினால் எரிச்சல் ஏற்பட்டால், அதனை காலையில் சிறிது நேரம் செய்தால் போதுமானது. இதனை செய்யும் 2 மணிநேரத்திற்கு முன் வெயிலானது சருமத்தில் படக்கூடாது.