GuidePedia

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ்



முட்டை அவசியம்


முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும். அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.


உருளைக்கிழங்கு


முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


வெங்காயச் சாறு


வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

அல்லது

வெங்காய சாறு, வைட்டமின் E-Tablet, தூய தேங்காய் எண்ணெய் கலந்து தேய்தால் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.


தூக்கம்


அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.


மன அழுத்தம்


மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

 
Top