GuidePedia


பற்களை குறிக்கும் இடம் 2ஆம் இடம் ஆகும் இவ்விடம் நன்றாக இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும், மேலும் ரிஷப ராசியும் நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்விடம் பல்லை குறிக்கும். மேலும் நாம் பரம்பரை பரம்பரையாகவும் வரும் பல் பிரச்சனையும் எடுத்துக்கொண்டு சொல்ல வேண்டும் உதாரணம் 2இல் குரு உள்ளது எனில் அப்பாவை விட ஒரு படி பல் நன்றாக இருக்கும். சரி இப்போது எந்தந்த கிரகங்கள் 2இல் இருந்தால் பற்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.



2இல் பல்வேறு கிரகங்கள் நிற்க பல்லில் ஏற்படும் பிரச்சனைகள்

சூரியன்

தீய பார்வை இல்லை எனில் பற்கள் வரிசையில் இருக்கும் ஒளி வீசும் அளவுக்கு பற்கள் நன்றாக இருக்கும்

சந்திரன்

நன்றாக இருந்தால் முத்து போன்று வெண்மை உடைய பற்கள், தேய்பிறை சந்திரன் எனில் பற்கள் பலமில்லாமல் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு எந்த குறைவும் இருக்காது.

செவ்வாய்

பற்களில் ரத்த கசிவு உண்டாகும். தீய பார்வை எனில் பற்களில் பாதிப்பு இருக்கும்.

புதன்

பற்கள் அழகாக இருக்கும்

குரு

பற்கள் அழகாக ஜொலிக்கும்

சுக்கிரன்

பற்கள் அழகாக வரிசைப்படி அமைந்திருக்கும்.

சனி

சொத்தை பல் இருக்கும். இவர்கள் ஜக்கரதயாக இருக்க வேண்டும். வயதான காலத்தில் பற்கள் சீக்கிரம் கொட்டி விடும்.

ராகு

முன்னாடி நீண்ட பல் அல்லது தெத்து பல் இருக்கும்.

கேது

பற்கள் இடைவெளி விட்டு இருக்கும்.



எந்த கிரகமும் இல்லை எனில்

இரண்டாம் அதிபதி நல்ல வீட்டில் இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். தீய கிரகங்கள் கூட்டணி இருக்க கூடாது.

கூட்டு கிரகம்

ஒரு நல்ல கிரகம் ஒரு தீய கிரகம் எனில் பற்கள் ஒழுங்காக இல்லை என்றாலும் ஜாதகன் சிரிப்பு நன்றாக இருக்கும்.

வயதான காலத்தில்

வயதான காலம் ராகு கேது காலம் ஆகும் எனவே இக்காலங்களில் பற்கள் விழுவது சகஜம்.

ரிஷபம்

இவ்வீடும் நன்றாக இருந்தால் பற்கள் நீண்ட காலத்துக்கு நன்றாக இருக்கும்.

பற்கள் பாதிக்க படும் காலம்

• இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருந்து அதன் தசா புக்தி நடைபெறும் போது

பற்கள் இடைவெளி விட்டு இருக்கும்.

• தீய கிரக பார்வை 2ஆம் வீட்டில் பட்டு அதன் தசா புக்தி நடைபெறும் போது

• கோள்சார ரீதியாக இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருக்கும் போது, பார்வை படும் போது

• முக்கியமாக கோள்சார ரீதியாக சனி இரண்டில் வரும்போது சொத்தை அடிக்கும், ராகு வரும்போது முன்னாடி வர ஆரம்பிக்கும், கேது வரும்போது இடைவெளி உண்டாகும், செவ்வாய் வரும்போது ரத்த கசிவு உண்டாகும். நல்ல கிரகம் வரும்போது சரி ஆக ஆரம்பிக்கும்.

• ரிஷப வீடு பாதிக்க பட்டு இருந்தால் இக்காலங்களிலும் பிரச்சனை ஏற்படும்

பற்கள் சரி ஆகும் காலம்

இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது, பார்வை பட்டால் ஜாதகன் மருத்துவ மனைக்கு போய் சரி செய்து கொள்வான், கோள்சார ரீதியாக 2இல் குரு வரும் போது சரி செய்து கொள்ளலாம். மேலும் தீய கிரகதுடன் நல்ல கிரகம் இருந்தால் இதன் தசா பக்தியில் பற்கலில் கிளிப் வைப்பது போன்றவற்றை செய்யலாம். மேலும் 2ஆம் அதிபதி தசா புக்தியிலே பற்கள் பத்தின கவலை ஜாதகனுக்கு தோன்றும்.

 
Top